தமிழகம்

ஊரெல்லாம் நோட்டீஸ் ஒட்டி குடிமகனின் அட்டூழியம், இந்த குடிப்பழக்கத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.!

Summary:

ஊரெல்லாம் நோட்டீஸ் ஒட்டி குடிமகனின் அட்டூழியம், இந்த குடிப்பழக்கத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.!

மது போதையில் மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு தான் இறந்து விட்டதாக கணவர் ஒருவர் தனக்கு தானே கணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்த்தவர் அன்பரசன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கிடைக்கும் வருவாயில் பாதிக்குமேல் குடித்துவிட்டு மீதி பணத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்து வந்துள்ளார்.

மேலும், மது போதையில் தினமும் மனைவியுடன் சண்டையிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின் தாம் இறந்துவிட்டதாக கூறி, தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். 

இந்த கண்ணீர் அஞ்சலி நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அன்பரசன் வீட்டில் வந்து பார்த்த போது, அவர் மது போதையில் அவர் நாடகமாடியது தெரிய வந்தது.

மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள். இந்த மதுவால் இன்னும் என்ன எல்லாம் நடக்க போகிறதோ என்று புலம்பி சென்றனர்.


Advertisement