வரதட்சணை கொடுமை.. 2 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய்.. விழுப்புரம் அருகே சோகம்..!

வரதட்சணை கொடுமை.. 2 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய்.. விழுப்புரம் அருகே சோகம்..!


dowry-cruelty-mother-committed-suicide-by-jumping-into

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கடக்கால்தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர்கள் லாலு பாஷா - ஜன்மா தம்பதியினர். இவர்களுக்கு பிர்தோஸ் என்ற மகள் உள்ளார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தை சேர்ந்த அன்வர் பாஷா என்பவரின் மகன் அப்துல்லா என்பவருக்கும் அந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பிர்தோஸ் கருவுற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள கிணற்றில் பிரதோஸின் குழந்தை சடலமாக மிதப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

vilupuram

இதனையடுத்து குழந்தையின் தாய் பிரதோஸை  காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேடி உள்ளனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கும், போலீசார்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தாய் பிரதோஸை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர்.

இந்நிலையில் பிரதோஸின் தாய் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் மேலும் வரதட்சணை கொடுமையின் காரணமாக தனது மகள் உயிரை மாய்த்து இருக்கலாம் என்றும் பிரதோஸின் கணவர் அப்துல்லா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அப்துல்லா  மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.