குழந்தை பிறந்த பின்னரும் வந்த கடுமையான வயிற்றுவலி! ஸ்கேன் செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

குழந்தை பிறந்த பின்னரும் வந்த கடுமையான வயிற்றுவலி! ஸ்கேன் செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



doctors-miss-sponge-in-stomach-after-delievery

தேனி மாவட்டம் மேலகூடலூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவரது மனைவி முத்துச்செல்வி. இவருக்கு ஏற்கனவே இருமகள்கள் உள்ள நிலையில், மீண்டும் 3-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  முத்துச்செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை காரில்  கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது மருத்துவமனை வாசலில், காரிலேயே முத்துச்செல்விக்கு குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முகம் சுளித்துக் கொண்டே நர்ஸ்கள் மற்றும் மருத்துவர் முதலுதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் தாய் மற்றும் குழந்தை இருவரையும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

doctors

 இந்நிலையில் வீட்டிற்கு வந்ததிலிருந்து, முத்துச்செல்விக்கு  அடிவயிற்றில் கடுமையான வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வலி தாங்கமுடியாமல் அவர் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் வாஞ்சிநாதன் பதறியடித்துக் கொண்டு முத்துச்செல்வியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது கருப்பையில் பஞ்சு இருப்பது கண்டறியப்பட்டு பின் அகற்றப்பட்டது.

இந்நிலையில் பதறிபோன வாஞ்சிநாதன் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மற்றும் நர்சுகள் மீது  கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.