90's கிட்ஸ்களின் கதாநாயகன் சித்த வைத்தியர் சிவராஜ் திடீர் மரணம்.!

90's கிட்ஸ்களின் கதாநாயகன் சித்த வைத்தியர் சிவராஜ் திடீர் மரணம்.!



doctor sivaraj died

உடல் நலக்குறைவு காரணமாக சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் இன்று காலமானார். 

ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் குடும்பம். குறிப்பாக ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி தொடர்பான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர் டாக்டர் சிவராஜ். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தவர் ஆவார்.

இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

sivaraj

மறைந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.