
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறி
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி, தேர்தல் பிரச்சாரம் என பயங்கர பிசியாக உள்ளது. மேலும் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத முதல் பெரிய சட்டமன்ற தேர்தலை தமிழகம் சந்திக்க இருப்பதால் இந்த முறை எந்த அணி வெற்றிபெறும் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மக்களின் வாக்குகளை பெரும் வகையில் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் திமுக இன்று வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் கிராமத்து மக்களை கவரும் வகையில் மகிழ்ச்சியான தேர்தல் வாக்குறுதி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டமானது திமுக ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும், தினக்கூலியானது 300 ரூபாயாக உயர்த்தி தரப்படும் எனவும் திமுக தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த தகவல் கிராமத்து மக்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement