அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மை எரிப்பு.! திமுகவினர் திடீர் போராட்டம்.!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மை எரிப்பு.! திமுகவினர் திடீர் போராட்டம்.!


dmk protest against minister rajendra balaji

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் சென்னை கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில் விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும். நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக. முதலமைச்சர் எடபடியாரை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்திருந்தார்.

dmk

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.