திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!

திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!


DMK Panchayat leader murder

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் கொசவன்பாளையம் லட்சுமிபதி நகரை சேர்ந்தவர் பரம குரு. இவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்தநிலையில் நேற்று மாலை இவர் அவர் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட சென்றார். அங்கு பரமகுரு செல்போனில் பேசி கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த 6 மர்மநபர்கள் பரமகுருவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பரமகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Murder

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.