"நீங்கதான் எங்க எம்.பி"., கதிர் ஆனந்தை மனதார வாழ்த்தி அனுப்பும் வாக்காளர்கள்: நெகிழ்ச்சியில் வேட்பாளர்.!dmk-mp-kathir-anand-congracts-by-voting-peoples

மக்கள் பணிகளில் ஓய்வறியாது உழைத்த திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கே இம்முறையும் வாய்ப்பு வழங்குவோம் என வேலூர் தொகுதி மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

2024 மக்களவை பொதுத்தேர்தலில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் களம்காணும் வேட்பாளர் கதிர் ஆனந்த். திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், தொடர்ந்து இரண்டாவது முறையாக வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக களம்காண்கிறார். 

கடந்த 2019 மக்களவை தேர்தலில் தனக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்த கதிர் ஆனந்துக்கு, தொகுதி மக்கள் தந்த ஆதரவால் வெற்றிபெற்றார். தான் வெற்றிபெற்று வந்ததும் தொகுதி மக்கள் பல ஆண்டுகளாய் கேட்ட ஒவ்வொரு பணியையும் திறம்பட செய்துகொடுத்தார். 

tamilnadu

சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை, கேவி குப்பம் பகுதியில் ஒன்றிய அரசு ஏற்படுத்திய சுங்கச்சாவடியை மக்கள் போராட்டத்தால் அகற்ற உதவியது, தனது தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட்டது, தொழுகுதிக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களவையில் குரல் கொடுத்தது என அவர் செய்த நற்பணிகள் ஏராளம். 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வேலூர் மக்களவை தொகுதியில் மாதனூர் மேம்பாலம், ஆம்பூர் பெரியாங்குப்பம் மேம்பாலம், வாணியம்பாடி கிரிசமுத்திரம் மேம்பாலம், அரபாக்கம் மேம்பாலம், காந்தனேரி மேம்பாலம் என மொத்தமாக 11 மேம்பாலங்கள் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

tamilnadu

அதேபோல, தனது தொகுதியில் இருக்கும் மாணவச்செல்வங்களில், விளையாட்டு துறையில் திறம்பட தனது பங்களிப்பை வெளிப்படுத்திய வீரர்களை தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான பல போட்டிகளுக்கு அனுப்பி வைத்து, அவர்களின் செலவை அனைத்தும் ஏற்று அவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியும் கொடுத்தார். மக்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்வியலுக்காகவும் பல முன்மாதிரி திட்டங்களை அவர் செயல்படுத்தி இருக்கிறார். 

கடந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனை பட்டியலுடன், எதிர்காலத்தில் தான் செய்து தரவேண்டிய பட்டியலையும் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் வாக்குசேகரிக்க செல்லும் கதிர் ஆனந்துக்கு, செல்லும் இடமெல்லாம் மக்கள் தங்களின் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்த முறையும் உங்களுக்கே எங்களின் வாக்கு, நீங்களே வெற்றி பெறுவீர்கள் என கதிர் ஆனந்திடம் மக்கள் வாயார வாழ்த்தி அனுப்பி வைக்கின்றனர். 

தொகுதி மக்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் குறித்த சில காணொளிகள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.