பாஜக நிர்வாகியை செருப்பால் அடிக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ! என்ன காரணம்.? வெளியான அதிர்ச்சி வீடியோ!

பாஜக நிர்வாகியை செருப்பால் அடிக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ! என்ன காரணம்.? வெளியான அதிர்ச்சி வீடியோ!



dmk-mla-try-to-attack-bjp-person

மதுரையில் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் என்பவருடன், திமுக எம்.எல்.ஏ மூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த சங்கரபாண்டியன். இவர்  பாஜக இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று, சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்புவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது சங்கரபாண்டி, தன் மீது தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்யுங்கள் நான் வழக்கை சந்தித்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ மூர்த்தி னது காலணியை கழற்றி சங்கரபாண்டியனை தாக்க முயன்றார்.அனைத்து சம்பவங்களும், சங்கரபாண்டியன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் வீடியோவாக பதிவாகியது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.