தமிழகம் Covid-19

மேலும் ஒரு திமுக எம்எல்ஏ க்கு கொரோனா பாதிப்பு..! திட்டக்குடி எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

Summary:

DMK MLA Ganesan corona test positive

தமிழகத்தில் மேலும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள், அரசியல்  பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சில கடந்த மாதம் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ மஸ்தான் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அதேபோல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும், அமைச்சர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ சி.வெ. கணேசன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.


Advertisement