தமிழகம்

கொரோனாவால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உயிரிழப்பு.!

Summary:

Dmk MLA anbalagam died

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனை அடுத்து 80 சதவீதம் பிராண வாயு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி அன்பழகன் காலமானார். 


Advertisement