அரசியல் தமிழகம் Covid-19

மேலும் ஒரு திமுக எம்எல்ஏ-விற்கு கொரோனா பாதிப்பு! தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Summary:

dmk mla affected by corona

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்க அரசியல் கட்சியினர் பல்வேறு களப் பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் செய்யூர் திமுக எம்எல்ஏ களப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு லேசான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம்  செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு அவர்களை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த 10ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.


Advertisement