50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!



dmk-minister-anbil-mahesh-statement-about-erode-by-poll

 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கிடைக்கும் வரவேற்பால் அவரே அமோக வெற்றி பெறுவார் என திமுக அமைச்சர் பேசினார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திமுக & அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இந்த இடைத்தேர்தலில் தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதாக வேட்பாளர்களை அறிவித்து தீவிர களப்பிரச்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, அமமுக சார்பில் சிவப்ரசாந்த் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்து. 

அதிமுகவில் உள்ள இரண்டு அணிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் பாஜக தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க இணைய வாய்ப்புள்ள்ளதால், அவர்களில் யார் நிறுத்தப்படுவர் என்ற தகவல் விரைவில் உறுதி செய்யப்படும். 

dmk

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எங்கு சென்றாலும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கின்றனர். அவரே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வர். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என தெரிவித்தார்.