குழந்தையை சுமந்தபடி உணவு டெலிவரி செய்த ஏழை தாய்! நேரில் அழைத்து நெகிழ வைத்த கனிமொழி!



dmk-kanimozhi-helped-uber-delivery-girl

பெண் ஒருவர் குழந்தையை தனது முதுகில் சுமந்து உணவு டெலிவரி செய்யும் செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சென்னையை சேர்ந்த வள்ளி என்ற அந்த பெண் வீட்டின் வறுமையின் காரணமாகவும், தனது கணவர் ATM நிலையில் காவலாளி வேலை பார்ப்பதால் போதிய ஊதியம் இல்லாத காரணத்தாலும் தானும் வேலைக்கு செல்ல திட்டமிட்டு இந்த வேலையில் இறங்கியுள்ளார்.

மேலும், குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் குழந்தையையும் தன்னுடனே  தூக்கிக்கொண்டு வேலைபார்த்து வந்துள்ளார். இந்த தகவல் தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு தெரியவந்ததை அடுத்து தனது உதவியாளர் மூலம் அந்த பெண்ணை வரவைத்து அவருடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண், தனது குழந்தையின் படிப்பு செலவுக்கு கனிமொழி உதவி செய்வதாக கூறியதாகவும், என்ன உதவி வேண்டுமானாலும் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்க்கொள்ளலாம் என்றும், தனக்கு ஒரு அரசாங்க வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என கேட்டதற்கு வேலைக்கு சிபாரிசு செய்வதாக அவர் கூறியதாகவும் கூறியுள்ளார் வள்ளி.

மேலும், தனக்கு புது புடவை ஒன்றை பரிசாக அவர் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.