சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
உயிரைக் கொல்லும் திமுக கொடி.! பகுத்தறிவு கிலோ என்ன விலை?
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மூத்த அமைச்சர்கள் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். நேற்று குமரியில் விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது.
முதல்வர், அமைச்சர் பெருமக்களுக்கு வரவேற்பு
இதற்காக மாவட்ட திமுக நிர்வாகிகள் முதல்வர், அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து இருந்தனர். மேலும், சாலைகள், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: 17 வயது பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் கொடூரம்.. குமரியில் அதிர்ச்சி.!
சரி செய்யும் பணியில் திமுக
இதனிடையே, இன்று வள்ளியூர் பகுதியில் திடீர் காற்றுடன் மழை பெய்யவே, திமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பம் சாலையில் சாய்ந்து கிடந்தது. இதனைக்கண்ட திமுக நிர்வாகிகள், அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதனிடையே, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமுகவுக்கு எதிரான அமைப்பினர், அரசியல் கட்சியினர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அறப்போர் இயக்கம் கேள்வி
திருநெல்வேலி வள்ளியூரில் தேசிய நெடுஞ்சாலையில் உயிரைக் கொல்லும் திமுக கொடி! பகுத்தறிவு கிலோ என்ன விலை?? pic.twitter.com/4VEBV6di8i
— Arappor Iyakkam (@Arappor) December 31, 2024
தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்து கிடைக்கும் கொடிகள்
திருநெல்வேலி வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில் நடப்பட்டிருக்கும் திமுகவின் கொடி 😡#ShameOnYouStalin pic.twitter.com/YAukHzPtU9
— Neela Raja 🇮🇳 (@Dr_Neela_) December 31, 2024
Noteட்விட் பதிவுகளின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐ லவ் யு சொல்ல தைரியம் இருக்கா? சிறுமியை ட்ரிக்கர் செய்து வீடியோ; 23 வயது இளைஞர் போக்ஸோவில் கைது..!