பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சில நாட்களில் வீட்டிற்கு திரும்புகிறார் கேப்டன் விஜயகாந்த்: உடல்நலம் முன்னேற்றம்.!
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர் & தலைவர் கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்ததில் இருந்து, அவர் வீட்டிலேயே குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 18ம் தேதி, சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் உடலநலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
முதலில் தேமுதிக சார்பில் வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு கேப்டன் வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டாலும், பின்னாளில் மார்புச்சளி காரணமாக செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ அறிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டது.
அவரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், "விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
செயற்கை சுவாசகருவியை அகற்றியபின்னும், அவரின் இயற்கையாக எவ்வித சிரமமும் இன்றி சுவாசித்து வருகிறார். சாதாரண வார்டிற்கும் மாற்றப்பட்டுவிட்டார்" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.