தமிழகம்

கணவனை பறிகொடுத்துவிட்டு உடலை அடக்கம் செய்ய வந்த இடத்தில் மாட்டிக்கொண்ட மனைவி..! கைக்குழந்தையுடன் பரிதவித்து நின்றவருக்கு மாவட்ட ஆட்சியர் செய்த உதவி..!

Summary:

District collector helps poor women during lock down

இறந்துபோன தனது கணவரை அவரது விருப்பப்படி சொந்த ஊரில் அடக்கம் செய்ய கணவனின் உடலோடு சொந்த ஊருக்கு வந்த அவரது மனைவி ஊரடங்கு காரணமாக அங்கையே மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வாகறையாம்பாளையம் பள்ளக்கோரையில் வசித்து வந்தவர்கள் அஞ்சலிதேவி-முனீஸ்வரன் தாம்பதியினர். பல வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்த இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முனீஸ்வரன் திடீரென்று நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

தான் இறந்தபிறகு தனது உடலை தனது சொந்த ஊரடான மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள, கடுப்பட்டி கிராமத்தில்தான் அடக்கம் செய்யவேண்டும் என கணவன் ஏற்கனவே கூறியதை நினைவில் கொண்டு, அவரது மனைவி கணவனின் உடலுடன் சொந்த ஊருக்கு சென்ற அஞ்சலி கணவனின் சொந்த ஊரில் அவரது உடலை அடக்கம் செய்துள்ளார்.

கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அஞ்சலி, ஊரடங்கு காரணமாக மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் தனது கைக்குழந்தைகளுடன் கணவரின் சகோதரரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

ஆனால் கணவரின் சகோதரர் வீட்டிலும் வறுமை ஆட்டிப்படைக்க, ஒரு மாதமாக போதுமான உணவின்றி, குழந்தைகளுடன் அஞ்சலி தவித்துவந்துள்ளார். இதனால் மீண்டும் கோயமுத்தூர் செல்ல முடிவு செய்துள்ளார் அஞ்சலி. ஆனால், கோயம்பத்தூர் செல்ல அவரிடம் போதுமான பண வசதியோ, போக்குவரத்துக்கு வசதியோ இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவந்துள்ளார்.

பின்னர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மூலம், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யை நேரில் சந்தித்து உதவி கோரியுள்ளார் அஞ்சலி. அஞ்சலியின் நிலையை அறிந்த ஆட்சியர், அவருக்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்களை அளித்து சொந்த ஊருக்கு அஞ்சலிதேவியும் அவரது குழந்தைகளும் காரில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

கணவனையும் இழந்து, கைக்குழந்தையுடன் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் செய்த உதவி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Advertisement