தமிழகம்

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசிய மர்ம நபர்கள்! தமிழையே அசிங்கப்படுத்திய தமிழர்கள்!

Summary:

disgraced Tiruvalluvar statue

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்தச் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைப்பார்த்த அப்பகுதியினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டார்.  

இந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது அப்பகுதியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது.
 


Advertisement