ராஜமௌலியுடன் கைகோர்க்கப்போகும் அந்த தமிழ் நடிகர்கள் யார்? - அசத்தல் பதில் கொடுத்த இயக்குனர்.!

ராஜமௌலியுடன் கைகோர்க்கப்போகும் அந்த தமிழ் நடிகர்கள் யார்? - அசத்தல் பதில் கொடுத்த இயக்குனர்.!



Director SS Rajamouli Pressmeet at Chennai Anna Nagar RRR Movie Trailer Release

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் நடிகர்களில் அஜய் தேவ்கன், ஆலியா பட் உட்பட பலரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.. இந்த பாத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நகரில் நடைபெற்றது. 

RRR

இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் ராஜமௌலி, "கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்திக்கிறேன். இதனால் அரசியல் பேச வேண்டாம். படம் குறித்து பேசலாம். சென்னைக்கு வந்தாலே பள்ளி மாணவர்கள் போல நான் உணர்கிறேன். 

RRR

சென்னை எனக்கு பள்ளி போன்றது. அனைத்தையும் கற்றுக்கொடுத்தது. ஹாலிவுட் நடிகர்களை விட நமது நடிகர்கள் திறமையானவர்கள். நமது நடிகர்களை வைத்து ஹாலிவுட் படம் எடுப்போம். தமிழில் என் கதைக்கு யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ, அவர்களை வைத்து நான் இயக்கி படம் எடுப்பேன். பாகுபலி படத்தை போல ஆர்.ஆர்.ஆர் படத்தின் கதாபாத்திரமும் பேசப்படும்" என்று தெரிவித்தார்.