தமிழகம்

வீட்டிலிருந்து, சமூக விலகலை பின்பற்றுவோருக்கு குலுக்கல் பரிசு! திண்டுக்கல் அமைச்சர் அறிவிப்பு!

Summary:

Dindugal minister anounce prize for people

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.மேலும் இந்தியாவிலும்  கொரோனா பரவிய நிலையில் 3,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.79 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென பலரும் வெளியே சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் ரூ2000 மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்கள், 13 வகையான காய்கறிகள் கொண்ட தொகுப்புகள் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும் வீட்டிலிருந்தபடியே சமூக விலகலை பின்பற்றுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என திண்டுக்கல் அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும்  முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக பீரோ, மூன்றாவது பரிசாக குக்கர் மற்றும் சிறப்பு பரிசாக பட்டு சேலைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement