மனைவியின் முன்னாள் காதலன் நடுரோட்டில் வெட்டிப்படுகொலை.. மக்களை பதறவைத்த சம்பவத்தின் பகீர் பின்னணி.!

மனைவியின் முன்னாள் காதலன் நடுரோட்டில் வெட்டிப்படுகொலை.. மக்களை பதறவைத்த சம்பவத்தின் பகீர் பின்னணி.!


Dindigul Vathalagundu Husband Murder Wife Ex Lover

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, மலையப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரின் மகன் சாமிதுரை (வயது 34). சாமிதுரை காதலித்து வந்த இதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கு, மருது என்ற திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. காதலியின் திருமணத்திற்கு பின்னர், சாமிதுரையும் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், சாமிதுரை - மருது இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், முன்னாள் காதலர்கள் இருவரும் ஒரே தெருவில் தனது கணவர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளனர். மருதுவுக்கு தனது மனைவியின் முன்னாள் காதல் குறித்த தகவல் தெரியவந்த நிலையில், அதன் பின்னரே மருது - சாமிதுரை இடையே அவ்வப்போது சண்டை நிகழ்ந்துள்ளது. 

இந்த பிரச்சனை இருதரப்பு குடும்ப மோதலாக உருவெடுத்த நிலையில், குடும்பத்தினரிடையே பிரச்சனை பேசி தீர்த்து வைக்க கூறி வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இருதரப்பும் விசாரணைக்கு அழைத்து காவல் துறையினர், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரவர் வாழ்க்கையை கவனிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். 

Dindigul

இதற்கிடையில், மருது மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சாமிதுரையை வத்தலகுண்டு - உசிலம்பட்டி சாலையில் வைத்து வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் பேக்கிரி முன்பு நடந்த பரபரப்பு கொலையால், அப்பகுதியில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறியோடினர். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக வத்தலகுண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சாமிதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு மருது மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.