பரபரப்பு.. அரசு பேருந்து கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைப்பு.. அரங்கேறிய சம்பவம்.!

பரபரப்பு.. அரசு பேருந்து கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைப்பு.. அரங்கேறிய சம்பவம்.!


Dindigul Palani Govt Bus Glass Broken by Strange Team with Stone

பணிமனைக்கு சென்ற 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஆயக்குடி பகுதியில் தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்துகழக கிளை பணிமனை உள்ளது. தங்களின் பணிநேரத்தை முடிக்கும் ஓட்டுனர்கள், பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்துவது வழக்கம். 

இந்நிலையில், பணிமனைக்கு 3 அரசு பேருந்துகள் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, அரசு பேருந்தை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இடைமறித்து, சற்றும் எதிர்பாராத நேரத்தில் கற்களை வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளது. 

Dindigul

இதனால் 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கிய நிலையில், கும்பல் தப்பி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.