BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருமணத்திற்காக மண்டபத்தில் காத்திருந்த உறவினர்களை இறுதி காரியம் செய்யவைத்த மணமகன்... நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!
ஒட்டன்சத்திரம் அருகே மணமகன் திருமணம் நடைபெறவிருந்த முதல் நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், நீலமலைக்கோட்டை குமாரபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் (வயது 24). இவர் பி.இ படித்துவிட்டு சுயதொழில் செய்து வருகிறார்.
இவருக்கு இன்று (செப் 1) திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இருவீட்டார் சார்பாக திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மண்டபத்தில் இருந்து பெண்வீட்டார் மாப்பிளை அழைப்புக்கு வருகையில் பெரும் சோகம் காத்திருந்துள்ளது.
தனது வீட்டில் இருந்த அர்ஜுனன் தூக்கிட்டு சடலமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அர்ஜுனனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கையில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அர்ஜுனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.