கோவையில் டிஐஜி தற்கொலை... பரபரப்பான விசாரணையில் காவல்துறை.!dig-suicide-in-coimbatore-police-department-full-swing

கோவை சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த  விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் கோவையில் டிஐஜி யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamilnadu

இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் . இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

tamilnadu

டிஐஜி தரத்திலிருக்கும் அதிகாரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  காவல்துறையினர் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.