தமிழகம்

அடேங்கப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ... பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வித்தியாசமான அழைப்பிதழ்.!

Summary:

அடேங்கப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ... பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வித்தியாசமான அழைப்பிதழ்.!

வித்தியாசமான முறையில் அச்சடிக்கப்பட்ட புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கட்டப்பட்டிருக்கும் புது வீடு ஒன்றிற்கு செப்டம்பர் 16ஆம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற உள்ளது.

அதற்காக அழைப்பு விடுவித்து  வித்தியாசமாக, மிக எளிமையாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.பால் காய்ச்சுறோம், என ஆரம்பித்து "எல்லாரும் வந்துடுங்க. விடியற்காலை வரமுடியாதவங்க, விடிஞ்சதுக்கு அப்புறம் வந்து எங்க சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம். உங்களை வரவேற்க வாசலில் நானும் என் மனைவியும் எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம்... வருவீங்கல்ல..." என்றுமிகவும் அன்பாக அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் இதில் குடும்பத்தினரின் பெயர்கள் அச்சிடப்படாமல் நான் மனைவி,மகள்,அம்மா என வித்தியாசமான அச்சிட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி சொந்தங்களின் பெயர்கள் எதுவும் இல்லாமல்,  வீடு கட்ட பணி புரிந்த அனைவரையும் "வியர்வை சிந்தி உதவிய உள்ளங்கள்"என்று குறிப்பிட்டு தலைமை மேஸ்திரி, கொத்தனார்,உதவியாளர்,கட்டுமானப் பொருட்கள் உதவி, கம்பி கட்டுனர், தச்சர், மின் வல்லுனர், நீர்க்குழாய், வர்ணம், தரை அழகு, கம்பி பின்னல், வாயிற்கதவு, நிதி உதவி என அனைவரது பெயரையும் பத்திரிக்கையில் குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

மேலும்  நிதியுதவியில் சத்குரு பைனான்ஸ் மற்றும் பலதரப்பட்ட நகைகள் என்று குறிப்பிட்டுள்ளது எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியுள்ளோம் என்பதை உணர்த்தும் வகையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

 


Advertisement