அடப்பாவி இப்படி பண்ணிட்டியேடா.. மதுபோதையில் நண்பனை கொலை செய்த இளைஞர்..!Did the innocent do this.. The young man who killed his friend under the influence of alcohol..!

சிதம்பரம் அருகே மேலகுண்டல்லபாடி கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன் என்பவரது மகன் சிலம்பரசன். சம்பவத்தன்று சிலம்பரசனின் தாய் தந்தை வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது தற்செயலாக பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் சிலம்பரசனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் வீட்டின் கதவை திறந்த போது படுக்கையில் கழுத்து மற்றும் உடம்பில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சிலம்பரசன் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் உடனடியாக போலிசார்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

young man

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் என்பவரும் சிலம்பரசனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சிலம்பரசனின் வீட்டிற்கு மது அருந்து வந்துள்ளார் தமிழ்ச்செல்வன். அப்போது மது போதையில் சிலம்பரசன் தமிழ்ச்செல்வனின் தாயைப் பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் நண்பன் என்றும் பாராமல் கத்தியால் சிலம்பரசனை குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.