திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!



dhuraimurugan admited in hospital

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிறுநீரக தொற்று எற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.