ஒரு ரசிகனாக எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் உருக்கம்..!!

ஒரு ரசிகனாக எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் உருக்கம்..!!


dhoni-to-continue-playing-for-chennai-said-chief-minist

ஒரு ரசிகனாக எம்.எஸ்.தோனி தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவதை விரும்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 53 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 55 வது லீக் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில், சென்னையின் செல்லப்பிள்ளை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடந்து விளையாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எம்.எஸ்.தோனி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், சென்னையின் செல்லப்பிள்ளை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். தோனி தன்னுடைய சொந்த உழைப்பாலும், கடின முயற்சியாலும் வளர்ந்தவர், அதனால் தான் அவர் முதலமைச்சர் கோப்பைக்கான தொடருக்கு விளம்பர தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளையான தோனி  கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் போல நானும் தோனியின் ரசிகன் தான். தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை உருவாக்க விரும்புகிறோம் என்று பேசியுள்ளார்.