திருமணமான பெண் மீது ஒருதலைக்காதல்; விரக்தியில் பெண்ணின் குழந்தைகளை கொலை செய்த செய்த இளைஞர்..! தர்மபுரியில் பேரதிர்ச்சி.!Dharmapuri Man Killed baby 

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டையை, முண்டாசு புறவடை கிராமத்தில் வசித்து வருபவர் பாலசந்தர். இவரின் மனைவி பிரியா. தம்பதிகளுக்கு 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, வீட்டில் இருந்த குழந்தைகள் இருவரையும் கடத்திச்செல்ல முற்பட்ட மர்ம நபர்கள், வெளிப்புறம் உள்ள பாறையின் மீது குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் 3 வயதுடைய சிறுவன் உயிரிழந்துவிட, மற்றொருவன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடேஷ் என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது கள்ளகாதலால் நடந்த பயங்கரம் தெரியவந்தது. 

குழந்தையின் தாயான பிரியாவின் மீது வெங்கடேசுக்கு அவரின் திருமணத்திற்கு முன்பு இருந்து ஒருதலைக்காதல் இருந்துள்ளது. இதற்கிடையில் பிரியா - பாலசந்தர் திருமணம் நடைபெற்றுள்ளது. காதலிக்கு திருமணம் ஆனாலும், ஒருதலைகாதலில் உறுதுணையாக இருந்த வெங்கடேஷ் இறுதியில் விரக்தியில் அவரின் குழந்தைகளை கொலை செய்து இருக்கிறார் என்பது தெரியவந்தது. 

இந்த கொலை சம்பவத்தில் பிரியாவுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான பெண்ணின் மீது கொண்ட ஒருதலைக்காதல், பச்சிளம் பிஞ்சின் உயிரை பறித்துள்ள சோகம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.