கடன் வாங்கி தவணை செலுத்தாமல் அலைக்கழிக்கும் திமுக பிரமுகர்; பணம் கேட்டு செல்வோரை தாக்கும் பயங்கரம்..!Dharmapuri DMK member attack man

அமைச்சரின் நெருங்கிய ஆதரவாளர் போல தன்னை காண்பித்துக்கொண்டு, வாங்கிய கடனை திரும்பி கேட்டு செல்லும் அப்பாவிகளை திமுக பிரமுகர் தாக்கி அனுப்பும் சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், திமுக ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன். இவர் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. 

இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில், அமைச்சரின் பெயரைக்கூறி பலரிடம் கடனாக பணம் பெற்றதாக தெரியவருகிறது. தமிழக மக்கள் பிரதானமாக அறிந்த போத்தீஸ் கடைக்கு ரூ.10 இலட்சம் தொகை தரவேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசியல்

அதேபோல், மாட்டலாம்பட்டி வணிகர்களிடமும் நிலுவை தொகை வைத்துள்ளார். இதனை கேட்க அவரின் கடைக்கு சென்றால், அங்கு அவர்களை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. 

சமீபத்தில் அவரின் கடைக்கு சென்றவர் கடனை கேட்டபோது, அன்பழகன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கடன் தொகையை திருப்பி கேட்டு சென்றவை கடுமைக்க தாக்கி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.