அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால்.... அதிரடி ஆப்பு..! தமிழக அரசு எச்சரிக்கை..!

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால்.... அதிரடி ஆப்பு..! தமிழக அரசு எச்சரிக்கை..!



Departmental action if government employees get married for the second time

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1973 தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின்படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, 2வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, மேலும் அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம்.  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937-இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.