"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பரிதாபம்... பல் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை... காதலன் அதிரடி கைது.!
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்ய பிரியா என்ற மாணவி நான்காம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மிகவும் சோகமாக காணப்பட்ட அவர் கல்லூரி மதிய உணவு இடைவேளையின் போது உறுதிக்கு வந்தவர் திரும்ப வகுப்பிற்கு செல்லவில்லை.
சத்ய பிரியா வகுப்பிற்கு வராததால் அவரது உடன்படிக்கும் தோழிகள் அவரது செல்போனிற்கு அழைப்பு கொடுத்துள்ளனர். சத்ய பிரியா செல்போன் அழைப்பிற்கும் பதிலளிக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் விடுதிக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்த நிலையில் மின்விசிறியில் சடலமாக தொங்கி இருக்கிறார் சத்ய பிரியா. இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சத்யபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சத்ய பிரியா கிருஷ்ணகிரியில் அவரது உறவுக்காரரான கோகுல் என்பவரை காதலித்து வந்தது தெரிய வந்திருக்கிறது மேலும் அவருடன் ஏற்பட்ட காதல் முடிவில் தான் இவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் படித்துக் கொண்டிருந்த கோகுலை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சத்யபிரியாவும் கோகுலம் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்து காதல் முறிவு செய்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார் கோகுல். இதனால் மனமுடைந்த சத்ய பிரியா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக கோகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.