தமிழகம் மருத்துவம்

வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்! சென்னை மக்களே உஷார்!

Summary:

dengue fever spreading in chennai

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வருகின்றனர். இந்தநிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்காக தற்போது சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கு மேலானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. டெங்குவை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து வைக்கக்கூடாது, தண்ணீர் தேங்கும் வகையில் எந்த பொருட்களும் பொது இடங்களில் வீசக்கூடாது என வீடு வீடாக சென்று விழிப்புணர்வை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் வசிப்பவர்கள் குழந்தைகளை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.


Advertisement