#Breaking: அரசு சிறப்பு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடியில் சிறப்பு வழி? - அமைச்சர் ஆலோசனையில் தகவல்.. உற்சாகத்தில் பயணிகள்..! 



deepawali-festival-celebration-tn-govt-special-bus

 

தீபஒளித்திருநாள் அக். 24ம் தேதி வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படவுள்ளது. இதனால் சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் பணியாற்றி வரும் தமிழர்கள் குடும்பத்துடன் தீபஒளியை சிறப்பிக்க சொந்த ஊர் திரும்ப தயாராகியுள்ளனர். தலைநகர் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உட்பட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். 

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான தீபஒளி திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து, அக். 21, 22, 23-ம் தேதிகளில் தீபஒளி சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tn govt

பயணிகளின் விரைவு பயணத்திற்கு வழிவகை செய்யும் பொருட்டு சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகள் மட்டும் விரைந்து கடந்து செல்ல, அதற்கென தனி கட்டண வசூல் முனையம் ஒதுக்கி தரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 16 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. 

அதனைப்போல, சென்னையில் உள்ள கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, கே.கே. நகர் போன்ற இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்களை தயார் செய்து, அங்கிருந்து பேருந்துகளை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.