தமிழகம் Covid-19

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த பலி எண்ணிக்கை!

Summary:

death increased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில் நேற்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 49 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவில் இன்று 49 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement