அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அண்ணனுடன் தகாத முறையில் காதல். ! கண்டுபிடித்து கண்டித்த தாய்க்கு காத்திருந்த பேராபத்து!!
தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்த நிலையில் அப்பகுதியிலேயே துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் தனது தூரத்து சொந்தக்காரரான இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்
இந்த விவகாரம் அப்பெண்ணின் தாயாருக்கு தெரியவந்த நிலையில், அந்த இளைஞர் உனக்கு அண்ணன் முறை வேண்டும், காதலை விட்டுவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்து என தாயார் கண்டித்துள்ளார். ஆனால் தனது தாயின் பேச்சைக் கேட்காத அந்த இளம் பெண் தனது காதலை தொடர்ந்துள்ளார்.

மேலும் தாயின் பேச்சை கேட்காமல் அவர்அந்த இளைஞனுடன் ஊரைவிட்டு ஓடியுள்ளார். இந்நிலையில் அத்தாய் தனது மகளை கடத்தி விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து இருவரும் வீடு திரும்பிய நிலையில் அந்த இளைஞர் தன் மீது கொடுத்த வழக்கை திரும்பப்பெறுமாறு காதலியின் தாயிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த தாயை மகளே காதலரின் துணையுடன் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் தாய் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.அதனை தொடர்ந்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.