அசுர வேகத்தில் உயரும் கேஸ் சிலிண்டர் விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

அசுர வேகத்தில் உயரும் கேஸ் சிலிண்டர் விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!


cylinder price increased

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் திருத்தி வருகிறது. இந்தநிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.25 அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

cylinder

ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் நடைபெற்றது. 

ஜூலை மாதம் முதல் சிலிண்டர் விலை 594 ரூபாயாக இருந்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.800 ஐ தாண்டியுள்ளது. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.