தமிழகம்

அபிராமியின் கணவர் விஜய்யின் தற்போதைய சோகமான நிலை என்ன தெரியுமா?

Summary:

Current status of kundradhur abirami husband

சில மாதங்களுக்கு முப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் குன்றத்தூர் அபிராமி. பெற்ற குழந்தைகளை பாலில் விஷம்வைத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் சுந்தரத்துடன் ஓட்டம் பிடித்தார் அபிராமி. பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இது குறித்து அபிராமியின் கணவர் விஜய் கூறுகையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

நான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு அவர்களை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகிறேன் என்று தீராக் கண்ணீரோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.


Advertisement