10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி: மிட்டாய் வாங்கித்தருவதாக பயங்கரம்.!

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி: மிட்டாய் வாங்கித்தருவதாக பயங்கரம்.!


Cuddalore Veppur 53 aged man Raped minor Girl 

 

தனிமனித ஒழுக்கமே பாலியல் ரீதியிலான அத்துமீறல் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும். அதனை கடுமையான சட்டத்தின் வாயிலாகவும் கொண்டு வரலாம். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ராமலிங்கம் (வயது 53). 

இவர் வசித்து வரும் பகுதியில், விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு 10 வயது சிறுமி வந்துள்ளார். 

இந்நிலையில், சிறுமியிடம் மிட்டாய் வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் சென்று ராமலிங்கம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.