சவுதியில் மாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்டு வர மகள் கண்ணீர் கோரிக்கை.!Cuddalore Vadalur Man Died Saudi Arabia

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரை சேர்ந்தவர் அன்பு. இவர் சவூதி அரேபிய நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அன்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

Cuddalore

இந்த விஷயம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் அவருடன் இருந்த நண்பர்களால் எடுக்கப்பட்டு குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Cuddalore

மேலும், இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அன்புவின் மகள்கள், தந்தையின் உடலை தாயகம் கொண்டு வர அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.