தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#Accident: மணல் லாரி சக்கரத்தில் சிக்கி தலை, உடல் நசுங்கி முதியவர் பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து.!
68 வயதுடைய முதியவர் மீது மணல் லாரி ஏறி இறங்கிய விபத்தில், அவர் உடல் முழுவதும் நசுங்கி மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, பெண்ணாடத்தை அடுத்த அரியராவி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 68). இவரின் மனைவி கோசலை (வயது 62). தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். மூவரில் 2 பேர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்கள். கடைக்குட்டி மகன் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு தற்போது ஊரிலேயே இருக்கிறார்.
தம்பதிகளின் மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால், தங்களுக்கு சொந்தமான வீட்டில் தனித்தனியே இருக்கின்றனர். இந்நிலையில், பரமசிவம் இன்று காலை அரியராவி கிராமத்தில் இருந்து சுமைதாங்கி வழியே இருசக்கர வாகனத்தில் பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த மணல் ஏற்றிச்சென்ற லாரி, பரமசிவத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பரமசிவத்தின் உடலில் லாரி ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை, உடல் முற்றிலும் நசுங்கி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார்.
அவரது இரண்டு கால்களில் ஒரு காலில் முட்டிக்கு கீழ் உள்ள பகுதியும், மற்றொரு காலில் பாதத்திற்கு கீழ் உள்ள பகுதியும் எஞ்சியுள்ளது. மூளை சாலையோரம் தனியே இருந்துள்ளது. இந்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பரமசிவத்தின் உடலின் பாகத்தை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய மணல் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்ட நிலையில், லாரியை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இதனால் சில மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சீரானது. இந்த சம்பவம் பெண்ணாடம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே திட்டக்குடி - பெண்ணாடம் சாலை வழியே செல்லும் கனரக லாரிகள் ஆபத்தான வகையில் அசுரவேகத்தில் பயணம் செய்து வந்த நிலையில், இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.