தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#Breaking: இருசக்கர வாகனம் - பேருந்து மோதி விபத்து: கல்லூரி பேராசிரியர் தலைநசுங்கி பலி.!
கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த பேராசிரியர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை & அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருபவர் வேல்முருகன்.
தினமும் இவர் தனது சொந்த ஊரான நைனார்பாளையம் கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தார்.
அச்சமயம், அவ்வழியே சென்ற பேருந்து, பேராசிரியரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், தலை நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பேராசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.