இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 49 வயது காமுகன் கைது.!

இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 49 வயது காமுகன் கைது.!


Cuddalore Thittakudi 11 Aged Minor Girl Sexual Harassed

 

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 49). இவரின் வீட்டருகே சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். 

சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில், அங்கு சென்ற சுப்பிரமணியன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

Cuddalore

இதனால் சிறுமி கூச்சலிடவே, ஒன்று திரண்ட அக்கம்பக்கத்தினர் சுப்ரமணியனை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர், சுப்பிரமணியனை திட்டக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மக்கள் கவனிப்பில் காயம்பட்ட கிழவனை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.