நாய்கடித்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி கட்டாயத்தில் ஏழை சிறுவன்; உதவி செய்ய தந்தை கோரிக்கை.!

நாய்கடித்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி கட்டாயத்தில் ஏழை சிறுவன்; உதவி செய்ய தந்தை கோரிக்கை.!


Cuddalore SriMushnam Boy Bite dogs Want Help Poor Family

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கானூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரின் மகன் பால செல்வா (வயது 4). சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்தான். 

அப்போது, அங்கு வந்த தெருநாய்கள் சிறுவனை கடித்து குதறியுள்ளது. இதனால் அலறிய மகனை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், உதடு பகுதியில் இருக்கும் சதையை நீக்கி இருக்கின்றனர். இதனால் சிறுவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த பாலமுருகன், மேற்படி சிகிச்சை செய்ய தன்னார்வலர்கள் மற்றும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவருக்கு உதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள் பாலமுருகனுக்கு தொடர்பு கொண்டு உதவி செய்யலாம், அவரின் G Pay எண்ணுக்கு பணம் அனுப்பலாம். 

GPAY : 87602 74277