ஆனந்தமாக குளித்த சிறுவனை இழுத்துச்சென்று கொன்ற முதலை.. கடலூர் கொள்ளிடம் ஆற்றில் கண்ணீர் சோகம்.. ஐ.டி.ஐ மாணவர் பலி.!

ஆனந்தமாக குளித்த சிறுவனை இழுத்துச்சென்று கொன்ற முதலை.. கடலூர் கொள்ளிடம் ஆற்றில் கண்ணீர் சோகம்.. ஐ.டி.ஐ மாணவர் பலி.!


Cuddalore Old Kollidam River Crocodile Killed ITI College Student He Bating River

 

பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த சிறுவனை முதலை இழுத்துச்சென்று கொன்ற சோகம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் பக்ரி. இவரின் மகன் திருமலை (வயது 17), கல்லூரியில் ஐ.டி.ஐ பட்டம் பயின்று வருகிறார். விடுமுறை நாளையொட்டி இவர் கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்வது இயல்பு. 

இந்நிலையில், நேற்று வழக்கம்போல பழைய கொள்ளிடம் ஆற்றில் மாலை 03:30 மணியளவில் திருமலை குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த முதலை அவரை இழுத்து சென்றது. 

Cuddalore

இதனால் பதறிப்போன அவர் காப்பாற்றக்கூறி அலறவே, இதனை நேரில் கண்ட மக்கள் தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனின் சடலத்தை மீட்டனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆற்றுக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம் என காவல் துறையினர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.