ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
#BigBreaking: 5 மாவட்டங்களை ஸ்தம்பிக்க வைக்கும் சாலை மறியல் - என்.எல்.சி விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..! பரபரப்பு பேச்சு.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி அனல் மின்நிலைய முதன்மை வாயிலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வலையமாதேவி பகுதியில் என்.எல்.சி நிர்வாகம் விளை நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மீதே கால்வாயை வெட்ட தொடங்கியது.
இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்த நிலையில், அங்குள்ள கிராமங்களில் வசித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகினர். சில இடங்களில் விவசாயிகள் பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொள்ள தொடங்கும் பட்சத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இனி வரும் பிரச்சனையை எதிர்கொள்ள தயாராகிவிட்டோம்.
கால்வாய் வெட்டும் பணி நாளை தொடர்ந்தால், மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவு சாலை மறியல் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒருநாள் சாலை மறியலோடு விட்டுவிடமட்டும். கடலூர் மாவட்டமல்லது அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சாலை மறியல் நடைபெறும்" என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.