விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
தேர்தல் முன்விரோதத்தில் பயங்கரம்.. 75 வயது முதியவர் அடித்தே கொலை..!
தேர்தல் முன்விரோதம் காரணமாக 75 வயது முதியவரை அடித்து கொலை செய்தவர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியசாமி என்ற ஒரு முதியவரின் மருமகள் எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
இந்தநிலையில், ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிமேகலை என்பவருக்கும், பெரியசாமிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் மாலை வேளையில் வீட்டிலிருந்த பெரியசாமியை, மணிமேகலை மற்றும் அவரது கணவர், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.
அப்போது காப்பாற்ற முயன்ற அவரது மகன் மற்றும் மருமகளையும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிமேகலை மற்றும் அவரது கணவர், அவரது ஆதரவாளர்கள் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்ததால், தலைமறைவான 5 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.