
விருதுநகர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரி சுடலை மாரியப்பன் என்பவர் கடந்த மதம் அதேகிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
போலீசார் சுடலைமாரியப்பனிடம் நடத்திய விசாரணையில் சுடலை மாரியப்பன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சுடலை மாரியப்பன், மீது, குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுடலை மாரியப்பன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சுடலை மாரியப்பன் லுங்கியைக் கிழித்து, ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement