நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்... தாயுடன் சென்ற 9 வயது சிறுமியை ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசிய மாடு!! வைரலாகும் வீடியோ!!

நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்... தாயுடன் சென்ற 9 வயது சிறுமியை ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசிய மாடு!! வைரலாகும் வீடியோ!!


cow-attack-for-9-years-old-girl

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹர் சின்பானு. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரும் அருகே உள்ள பள்ளி ஒன்றில் 4 ஆம் மற்றும் 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். பானு தனது இரண்டு மகள்களை நடந்து சென்று பள்ளியில் விட்டு வருவதும் பிறகு மாலை நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்துள்ளார்.

நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் தனது இரண்டு மகள்களையும் அழைத்து கொண்டு அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி இளங்கோ தெரு வழியாக வந்துள்ளார் பானு. அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த மாடு ஒன்று பானுவின் மூத்த மகளான ஆயிஷாவை மிகவும் ஆக்ரோஷமாக தனது கொம்பால் தூக்கி வீசி எரிந்துள்ளது.

அத்துடன் விடாமல் சிறுமியை தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கத்தி கூச்சலிட்டு கொண்டே கல்லால் மாட்டை தாக்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மாட்டை கல்லால் தாக்கியும் மாடு சிறுமியை விடுவதாக இல்லை. ஒருவர் கட்டையால் மாட்டை தாக்கிய பிறகு தான் மாடு சிறுமியை விட்டது. 

பின்னர் சிறுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.