ஆன்லைன் ரம்மி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! நீதிமன்றம் உத்தரவு.!

ஆன்லைன் ரம்மி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! நீதிமன்றம் உத்தரவு.!court-order-for-online-rummy

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்தனர்.

Rummy

மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.